தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி, சுகாதார ஆய்வாளரின் வழிகாட்டுதலின்படியும் திருச்செந்தூார் நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ஆர்.ரமேஷ் தலைமையில் சென்னை சேர்ந்த ஸ்ரீமதி கலைக்குழு சார்பாக மக்கும் குப்பை மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.
திடக்கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு, 14420 கசடு கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு, நெகிழி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு, ஆடல் பாடல் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு வார்டு 3 பேருந்து நிலையப் பகுதியில் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் உட்பட பலரீ கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment