இக்கோயிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இருவழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ. 100 மட்டுமே பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் அதிகாலையில் விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.100 பெறப்படுகிறது. மேலும் அபிஷேக கட்டணமாக சாதாரண நாட்களில் ரூ.500, விஷேச நாட்களில் ரூ. 2 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று துவங்கியது. ஆனால் முன்னறிவிப்பு இல்லாமல் தரிசன கட்டணமும் பல மடங்கு எகிறியது.
விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.2000-மும் யாகசாலை உள்ளே அமர்ந்து பார்க்க ரூ. 3000, அபிஷேக கட்டணம் ரூ. 3000, சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100யும் கூடுதலாக விரைவு தரிசன கட்டணமாக ரூ.1000மும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. இந்த திடிர் கட்டண உயர்வால் பக்தர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அறநிலையத்துறை கோயில்கள் கார்ப்பரேட் கம்பெனி நிகராக லாப, நஷ்ட கணக்குகள் பார்த்து செயல்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கூறிவருகின்றனர். பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா அறநிலையத்துறை??

No comments:
Post a Comment