கிரீன் கிருஸ்துமஸ் - பண்டிகை பிளாஸ்டிக் இல்லாத கிறிஸ்துமஸ் கொண்டாட பனையோலை அலங்கார பயிற்சி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 November 2023

கிரீன் கிருஸ்துமஸ் - பண்டிகை பிளாஸ்டிக் இல்லாத கிறிஸ்துமஸ் கொண்டாட பனையோலை அலங்கார பயிற்சி.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், நவ 18. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக, ஒரு நாள் பயிற்சி 19.11.2023 ஞாயிறு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திருமறையூர் வளாகத்தில் வைத்து நடைபெறுகின்றது.


பிளாஸ்டிக் பொருட்களினால் இப்புவி அதிக மாசடைந்துள்ளது. Micro Plastic என்றழைக்கப்படும் பிளாஸ்டிக்கின் மக்காத கழிவுகள் இன்று மனிதனின் இருதயத்திலும் கூட இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 


எனவே பிளாஸ்டிக் இல்லாத கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு ஏதுவாக பனையோலையினால் செய்யப்பட்ட கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் செய்யும் பயிற்சி நடைபெறுகிறது. 


இப்பயிற்சியில் பனையோலை நட்சத்திரம், அலங்கார மாலை, மலர்கள் மற்றும் அநேக கலைப்பொருட்கள் செய்யும் பயிற்சி நடைபெறுகின்றது. விருப்பமுடையவர்கள் பங்குகொள்ளலாம். 


பங்குபெற விரும்புகின்றவர்கள் 9488400874 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்களைக் கேட்டு அறிந்துகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். 


அரிய வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள். விருப்பமுடைய உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad