நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் நாசரேத் YMCA சார்பில் தியாகி செல்லத்துரை நினைவாக இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் 5 பிரிவுகளில் நடந்தது. ஒன்பது வயது, பதினொரு வயது, பதி மூன்று வயது, பதிணைந்து வயது மற்றும் இருபத்தியோரு வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது.
தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். போட்டி அமைப்புக் குழுவைச் சேர்ந்த லேவி அசோக் சுந்தரராஜ் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுதாகர் உட்பட பொறுப்பாளர்கள் அனைவரும் புறாக்களை பறக்கவிட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாலையில் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் YMCA தலைவர் எபனேசர் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுதாகர் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. 90 வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் ராஜீவ்குமார் நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கினார். தியாகி செல்லத்துரை நினைவாக YMCA சார்பில் வெற்றி கோப்பைகள் வழங்கப் பட்டன.
அதிக மாணவர்களை பங்களிக்கச் செய்த பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொழிலதிபர் கெர்சொம் கிறிஸ்டியன், நாசரேத் பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ரூபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட செஸ் கழக செயலாளர் டாக்டர் கற்பகவள்ளி மற்றும் YMCA வை சார்ந்த ஆர்ம்ஸ்ட்ரங், பர்ணாபஸ் ஜெயக்குமார் , சாம்சன் மோசஸ், புஷ்பராஜ், ஆல்வின் மனுகுமார், லவ்சன், விஜயகுமார், லாசர் மற்றும் YMCA உறுப்பினர்கள் செய்திருந்தனர். முடிவில் YMCA செயலர் சாமுவேல்ராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment