சாத்தான்குளம், 03/10/23 முதல் 05/10/23 வரை நாட்டு நலப்பணி திட்டம் TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சிறப்பூர் பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் D.ஜெபசிங் மனுவேல் தலைமையுரையில் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்டம் பற்றியும், மாணவர்கள் வருங்கால இந்தியாவில் எவ்வாறெல்லாம் சமூக சேவைகள் செய்யவேண்டும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் நாட்டுமக்களுக்கு எவ்வாறெல்லாம் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என சிறப்புரை ஆற்றினார்கள்.
பள்ளி நாட்டு நலப்பணி திட்ட பொறுப்பாசிரியர் S. சாம் ஜெயக்குமார், துணை பொறுப்பாசிரியர்கள் லயன் M. டேனியல் மற்றும் A. ஜெரோம் ஆசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவ்வூரிலுல்ல முட்புதர்கள், சீமை உடை மரங்கள் அகற்றப்பட்டன, தேவாலயம், சிற்றாலயம், நடுநிலைப்பள்ளி வளாகங்களில் வளர்ந்திருந்த தேவையற்ற புதர்செடிகள் அகற்றப்பட்டு வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டது.
தெருக்களிலுள்ள குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டது. பிளாஸ்டிக் இல்லா ஊராக மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மக்கும் குப்பை மட்கா குப்பை பிரிதறியதக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment