தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பற்றி சாத்தான்குளம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த T.N.D.T.A RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கோமதி சங்கர் ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர், மண்டல துணை வட்டாட்சியர் தாஹிர் அகமது, வட்ட வழங்கல் அலுவலர் பிரபு, மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லயன் M. டேனியல், மற்றும் B. வசந்த் ஜெபதுரை மற்றும் R. ராஜேஷ் ஜெபசீலன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment