ஆற்றில் மூழ்கி பலியான கூட்டுறவு வங்கி ஊழியர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 October 2023

ஆற்றில் மூழ்கி பலியான கூட்டுறவு வங்கி ஊழியர்.

அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் முனியசாமி (வயது 30). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முனியசாமி தனது குடும்பத்துடன் நேற்று நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். சீவலப்பேரி ஆற்றுப்பாலம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முனியசாமி திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரை அவருடைய தந்தை உள்பட அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்.


இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை மாவட்ட உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆற்றில் இறங்கி ரப்பர் படகு மூலம் முனியசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் முனியசாமியின் உடலை மீட்டனர். 


பின்னர் சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீதாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad