தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று புரட்டாசி 3 வது சனிக்கிழமை கருடசேவை நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம் 6.30 மணிக்கு திருமஞ்சனம். 7.30 மணிக்கு உற்சவர் சீனிவாசப் பெருமாள் தெற்கு கோவிலுக்கு எழுந்தருளினார், 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
பின்னர் அலங்காரம். தீபாராதனை. சாத்துமுறை நடந்தது. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்காரம் செய்து மாலைகள் சாற்றப்பட்டு 10.30. மணிக்கு கருட வாகனம் மலையில் சுற்றி வந்து இரவு 12.10 மணிக்கு இறங்கினார். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் .சடாரி. பிரசாதம் வழங்கப்பட்டது. 1 மணிக்கு உற்சவர் சீனிவாசப் பெருமாள் எதாஸ்தானம் எழுந்தருளினார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment