திருச்செந்தூர் கோயிலில் தேங்காய் உடைக்கும் இட மாற்றத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 October 2023

திருச்செந்தூர் கோயிலில் தேங்காய் உடைக்கும் இட மாற்றத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்களின் நாளுக்கு நாள் வருகை அதிகரித்துள்ளது. மகா மண்டபத்தில் தேங்காய் உடைப்பதால் தேக்கநிலை ஏற்பட்டு சுவாமி தரிசனத்தில் தாமதம் ஏற்படுகிறது. விரைவான தரிசனத்திற்காக ரூ.100 சிறப்பு கட்டண வரிசையில் வரும் பக்தர்களுக்கு முதல் பிரகாரம், வள்ளியம்மன் சன்னதி அருகில், தட்சிணாமூர்த்தி சன்னதி எதிரே நாயன்மார்கள் சன்னதி அருகே தேங்காய் உடைப்பு, அர்ச்சனை செய்ய வேண்டும்.

பொது தரிசன வரிசையில் வரும் பக்தர்களுக்கு முதல் பிரகாரத்தில் மகா மண்டபத்திற்கு வெளியே குமரவிடங்க பெருமான் சன்னதி அருகில் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் துவார பாலகர் அருகில் தேங்காய் உடைப்பு, அர்ச்சனை செய்ய வேண்டும். மகா மண்டபத்தில் மயில்தேவர் சிலை முன்புறம், பின்புறம் மற்றும் மூலவர் சன்னதி முன்புறம், சண்முகர் சன்னதி முன்பாக வழங்கப்படும் விபூதி பிரசாதத்தை பிற கோயில்களைப் போல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் முடிந்து வெளியேவரும் வாயிலில் திரிசுதந்திரர்கள் மூலம் தங்க கொடிமரம் முன்பாக வழங்க வேண்டும்.


நடராஜர் சன்னதி முன் பட்டர், சிவாச்சாரியார்கள் மூலம் வழங்க வேண்டும் என அக்கோயில் இணை கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக சுப்பிரமணியசுவாமி திருக் கோயில் சுதந்திரபரிபாலன ஸ்தலத்தார்கள் சபா தலைவர் வீரபாகுமூர்த்தி, 'கோயில் இணைக் கமிஷனரின் உத்தரவு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. எங்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை.


இணை கமிஷனரின் உத்தரவில் விதிமீறல் உள்ளது. அதற்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி இணைக் கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad