செல்ஃபோன் ஒளிபரப்பு பேரிடர் எச்சரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 October 2023

செல்ஃபோன் ஒளிபரப்பு பேரிடர் எச்சரிக்கை.

நாளை செல்ஃபோன் - இல் நடைபெற உள்ள பேரிடர் எச்சரிக்கை சோதனை குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர்கால எச்சரிக்கை செய்தி 20.10.2023 அன்று செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. 


இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்றும் இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad