குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடை அமைப்பதற்காக குடும்பத்துடன் குலசேகரன்பட்டினத்தில் தங்கி இருந்தவர், மதுரை சவுந்திரபாண்டி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (36). இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு கார்த்திகை வள்ளி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குலசை சூரசம்ஹாரம் நடைபெறும் சிதம்பரேஸ்வரர் கோவில் பகுதியில் தங்கி ஊசி, பாசி வியாபாரம் செய்து வந்துள்ளனர். நேற்று இரவு வியாபாரம் முடித்து சிதம்பரரேஸ்வரர் கோவில் கடற்கரை பகுதியில் படுத்து உறங்கி உள்ளனர். அப்போது பெற்றோருடன் குழந்தையும் படுத்து உறங்கி உள்ளது.
நள்ளிரவில் திடீரென மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அம்சவள்ளி கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தான் தனது குழந்தையை வாயை பொத்தி கடத்தி சென்று இருக்க வேண்டும் என அம்சவள்ளி இன்று காலை குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரகு ராஜன் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வருகிறார்.
மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவை கண்காணிப்பு கேமராவை கேமராவை பார்த்து வருகிறார்கள். கோவிலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த பத்து தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் தங்கி இருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குலசையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment