நாசரேத்தில் தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபனின் அப்பாவின் இரண்டாவது மரணம் என்ற சிறுகதை நூலின் வெளியீட்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 October 2023

நாசரேத்தில் தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபனின் அப்பாவின் இரண்டாவது மரணம் என்ற சிறுகதை நூலின் வெளியீட்டு விழா.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபனின்(கோ. ஆறுமுக பெருமாள்) அப்பாவின் இரண்டாவது மரணம் என்ற சிறுகதை நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற பேராசிரியர் காசிராசன் தலைமை வகித்தார். தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணராஜ் வரவேற்றார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் இராமச்சந்திரன் நூலினை வெளியிட, முதல் பிரதியை தொடுவானம் ஆசிரியர் கவிஞர் தேவன் பெற்றுக் கொண்டார். 


விழாவில் எழுத்தாளர் பிரபாகரன், கலை இலக்கியப் பெருமன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் அருட்சகோதரி எழிலரசி, ஏரல் லோபா மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் முருகன், தூய சவேரியார் கல்லூரி துணை பேராசிரியர் ஜோஸ்பின் பாபா ஆகியோர் நூல் பற்றிய கருத்துகளை குறித்து பேசினர். கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் அறம் சிறப்புரையாற்றினார். நாசரேத் நூலகர் பொன்ராதாவிடம், நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டனகண்ணகுமார விஸ்வரூபன் ஏற்புரை வழங்கினார். 


இதில் வணிகர் சங்க செயலாளர் செல்வன், வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் ஞானையா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக பொருளாளர் இரஞ்சன், பாபு செல்வன், மோகன்சிங், இராபர்ட், நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், அலெக்ஸ்பிரிட்டோ, மனோகரன், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி, வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி, துணைத் தலைவர் கொம்பையா, மூக்குப்பீறி கிராமப்புறத் தமிழ் மன்றத்தின் தலைவர் தேவதாசன்,கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாணிக்கம், கட்டுமானச்சங்க தலைவர் டேவிட், விவசாய சங்கத்தலைவர் ராமையா, ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் , பொது மக்கள் கலந்து கொண்டனர். கோ. ஆறுமுக பெருமாள் எனும் கண்ண குமார விஸ்வரூபன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad