கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் கருட சேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 October 2023

கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் கருட சேவை.

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று புரட்டாசி 4 வது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது. 


காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு உற்சவர் சீனிவாசப் பெருமாள் தெற்கு கோவிலுக்கு எழுந்தருளினார், 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11.30 மணிக்கு அலங்காரம். தீபாராதனை. 12.30 மணிக்கு சாத்துமுறை நடந்தது. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 


மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7.30 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்காரம் செய்து மாலைகள் சாற்றப்பட்டு 10.30. மணிக்கு கருட வாகனம் மலையில் சுற்றி வந்து இரவு 12.30 மணிக்கு இறங்கினார். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. 


1.30 மணிக்கு உற்சவர் சீனிவாசப் பெருமாள் சேர்க்கைக்கு எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad