நாசரேத், மர்காஷியஸ் ரோட்டில் உள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

நாசரேத், மர்காஷியஸ் ரோட்டில் உள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், மர்காஷியஸ் ரோட்டில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.


நாசரேத் பேருந்து நிலையம் அருகில் மர்காஷியஸ் ரோட்டில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்ற கோரி நகர காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக காஆக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், நாசரேத் 3வது வார்டு உறுப்பினருமான ஐஜினஸ் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் மாணவரணியினர் சார்பில் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.



இது குறித்து காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நகர ஒருங்கிணைப்பாளர் காட்வின் கூறுகையில் நாசரேத் நகரின் மெயின் பஜாரில் இயங்கும் மதுக்கடையால் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று வரும் மக்களுக்கும் மற்றும் பொது மக்கள் ஆலயத்திற்கு சென்று வரும் பிரதான சாலையில் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கிரார்கள். அதோடு பெண்களை கேலி செய்வதும் அவர்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.



இந்த கடையை நகரின் மையப் பகுதியில் இருந்து அகற்ற கோரி கடந்த ஆட்சி முதலே அரசியல் தலைவர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க வந்துள்ளதாக தெரிவித்தார்


மேலும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தபின்  ஐஜினஸ் ஊடகத்திற்கு தெரிவிக்கையில் நாசரேத் நகரை உருவாக்கிய நகர தந்தை மர்காஷியஸ் பெயரில் உள்ள ரோட்டில் இயங்கும் மதுக்கடையை அகற்றும் வரை ஓய மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad