ஆறுமுகநேரி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 October 2023

ஆறுமுகநேரி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை மணல் தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் ராகவன் (17), சாத்தான்குளம், நாசரேத் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுபாஷ் மகன் ஹரிஹரன் (21). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை ஒரே பைக்கில், ஆறுமுகநேரில் நடந்த தசரா பூஜைக்காக வந்து கொண்ருந்தனர். 


ஆறுமுகநேரி - ஓடக்கரை பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் இவர்களது பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ராகவன், ஹரிஹரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப் பதிந்து காரை ஓட்டிவந்த ஆறுமுகநேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜான்சன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

No comments:

Post a Comment

Post Top Ad