15,000/- மதிப்புள்ள 3 ஆடுகள் திருட்டு - சிறுவன் உட்பட 3 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 October 2023

15,000/- மதிப்புள்ள 3 ஆடுகள் திருட்டு - சிறுவன் உட்பட 3 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை திருடிய எதிரிகள் கைது - ரூபாய் 15,000/- மதிப்புள்ள 3 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.


நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த பரமசிவன் மனைவி பெருமாள்கனி (56) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கடந்த 12.10.2023 அன்று வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் ஒரு ஆடு மற்றும் 2 ஆட்டுக்குட்டிகளை காரில் திருடி சென்றுள்ளனர்.


இதுகுறித்து மேற்படி பெருமாள்கனி அளித்த புகாரின் பேரில் நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், என். புதூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் கமலேஷ் கிரண் (21), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (எ) முருகன் (19), மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் பாலமுருகன் (20) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர் சேர்ந்து மேற்படி பெருமாள்கனியின் வீட்டில் இருந்த ஆடு மற்றும் ஆட்டுக்குட்டிகளை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து நாரைக்கிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் மேற்படி எதிரிகளான கமலேஷ் கிரண், கணேசன் (எ) முருகன் மற்றும் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேற்படி எதிரிகளிடமிருந்து ரூபாய் 15,000/- மதிப்புள்ள ஆடு மற்றும் 2 ஆட்டுக்குட்டிகளையும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நரைக்கிணறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி கமலேஷ் கிரண் மீது ஏற்கனவே திருச்சி மாவட்டம் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், எதிரி கணேசன் (எ) முருகன் மீது ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கடம்பூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மணியாச்சி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad