தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர் ஜோசுவா சாம் துரை வெற்றி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 September 2023

தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர் ஜோசுவா சாம் துரை வெற்றி.


மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர் ஜோசுவா சாம் துரை மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

                               
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருடம் தோறும் செஸ் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடமும் தூத்துக்குடி கல்வி மாவட்  அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் நடைபெற்றது. அதில் 14 வயதிற்குட் பட்டோர் பிரிவில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜோசுவா சாம் துரை  முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். 


வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற ஜோசுவா சாம் துரையை பள்ளி தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், உதவி தலைமை ஆசிரியர் ஜெய சீலன் சேகர்,  உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர்,  உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித் செல்வசுந்தர், தனபால் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad