தூத்துக்குடி, மாவட்ட ஆயுதப்படை கவாத்து பயிற்சியை எஸ். பி ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 September 2023

தூத்துக்குடி, மாவட்ட ஆயுதப்படை கவாத்து பயிற்சியை எஸ். பி ஆய்வு.

தூத்துக்குடி, மாவட்ட ஆயுதப்படை கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு. தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் வைத்து இன்று (30.09.2023) காலை நடைபெற்றது.


மேற்படி கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர்கள் சொக்கலிங்கம், வெங்கடேசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கென்னடி, சக்திவேல் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad