ஆனந்த புரம் அருகே தீப்பிடித்து எரிந்த கார் - பயணிகள் உயிர் தப்பினர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 September 2023

ஆனந்த புரம் அருகே தீப்பிடித்து எரிந்த கார் - பயணிகள் உயிர் தப்பினர்.

சாத்தான்குளம் அடுத்த ஆனந்தபுரம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சார்ந்தவர் ஆனந்த பெருமாள். எலக்ட்ரீசியன் தொழில் செய்துவரும் இவர் தனக்கு சொந்தமான TATA Indigo காரில் தினமும் காலை குழந்தைகளை அழைத்துக் கொண்டு 2 கிலோமீட்டர் தூரம் சென்று வருவது வழக்கம்.


அதன்படி இன்று 27.09.2023 காலை வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு நாசரேத் சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரின் முன்புறம் லேசான புகை வாசனை வந்ததை அறிந்து, குழந்தையை தூக்கிக் கொண்டு காரில் இருந்து இறங்கி இருக்கிறார். 


அவர் இறங்கியதும் நொடிப்பொழுதில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த காரின் தீயை அணைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad