ஸ்ரீவைகுண்டம் - நத்தம் கோவில் பௌத்ரோத்ஸவம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 September 2023

ஸ்ரீவைகுண்டம் - நத்தம் கோவில் பௌத்ரோத்ஸவம்.


ஸ்ரீவைகுண்டம் செப் 12. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில்  2 வது திருப்பதி யான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நத்தம் (வரகுணமங்கை) கோவிலில் ஆண்டுதோறும்  பௌத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். வைஷ்ணவகோவில்களில் தினசரி நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரங்களாக பௌத்ரோத்ஸவம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் துவங்கி 3 நாட்கள் பௌத்ரோத்ஸவம் நடக்கின்றது..      


இரண்டாம் நாளான நேற்று காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு சிறப்பு ஹோமம். 11.30 மணிக்கு பூர்ணாகுதி. நாலாயிர திவ்யப்பிரபந்தம் நடந்தது. 1.00 மணிக்கு சாத்துமுறை. தீர்த்தம். சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு ஹோமம். 7  மணிக்கு  தோளுக்கினியானில் சுவாமி இடர்கடிவான் புறப்பாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள்  கண்ணன். ராஜகோபாலன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் கண்ணன் அத்யாபகர்கள் சீனிவாசன்  நரசிம்மன் பட்சி ராஜன் திருவேங்கடத்தான்.  நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி தக்கார் அஜித் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

No comments:

Post a Comment

Post Top Ad