நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் சப்பர பவனி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 September 2023

நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் சப்பர பவனி

நாசரேத் .செப்.10
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கடந்த 30 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10நாட்கள் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலி நடந்தது. 9ம் திருவிழா மாலை 5.30மணிக்கு ஜெபமாலை, திருவிழா ஆராதனை தைலாபுரம் பங்குத்தந்தை ததேயு தலைமையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பங்குத்தந்தை எட்வின் முன்னிலையில் நடந்தது. இதனை தொடர்ந்து சமபந்தி நிகழ்ச்சி நடந்தது. 
10ம் திருவிழா காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. பாளையங்கோட்டை மறை மாவட்ட பங்குத் தந்தை எட்வின் தலைமை வகித்து மறையுரை ஆற்றினார். மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அன்று மாலை 6மணிக்கு அன்னையின் சப்பர பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.இதையடுத்து இரவு 8மணிக்கு கொடியிரக்கம் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் மற்றும் இறை மக்கள்,விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad