தூத்துக்குடி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 September 2023

தூத்துக்குடி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.


தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரிச்செல்வம் (20) என்பவர் நேற்று (13.09.2023) தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு மதுபோதையில் வந்த தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சௌந்தரபாண்டியன் (20) மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் பவிஸ்ரீ நகரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் செல்வபெருமாள் (எ) கட்டப்பெருமாள் (22) ஆகிய இருவரும் மேற்படி மாரிசெல்வத்தை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதுகுறித்து மாரிசெல்வம் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரத்னவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து எதிரிகளான சௌந்தரபாண்டியன் மற்றும் செல்வபெருமாள் (எ) கட்டபெருமான் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சௌந்தரபாண்டியன் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், எதிரி செல்வபெருமாள் (எ) கட்டபெருமாள் மீது வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad