தூத்துக்குடி மாவட்டத்தில் தங்க நகைகளை அடகு வைத்து பணத்தை ஷேர் மார்க்கெட் மற்றும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்று தருவதாக தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி புதியம்பத்தூர், நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மதன்குமார் என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் செல்லத்துரை மகன் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை ஷேர்மார்க்கெட், நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாகவும், அவ்வாறு கொடுப்பவர்களிடம், 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூபாய் 10,000/-மும் சேர்த்து கொடுப்பதாகவும், மேலும் 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய மேற்படி மதன்குமார் கடந்த 06.05.2023 அன்று தனது தாய் மற்றும் சகோதரியிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 09.05.2023 அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார். இதில் மதன் குமாருக்கு எதிரிகள் ரூபாய் 40,000/- பணம் மட்டுமே கொடுத்துவிட்டு, கார் வாங்க முன்பணமும் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த 26.06.2023 அன்று மேற்படி எதிரி கிரேனா என்வரின் வீட்டிற்கு சென்று நகைகளை தருமாறு கேட்டதற்கு, மேற்படி எதிரிகள் 3 பேரும் சேர்ந்து மதன் குமாரிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து மதன்குமார் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, மேற்படி எதிரிகளான கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் கடந்த 10.07.2023 அன்று கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, பிள்ளைமுத்து, லலிதா, தலைமை காவலர்கள் சுப்பையா, செந்திவேல் முருகேயன், முதல் நிலை பெண் காவலர் ஜெயலட்சுமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் எதிரிகளுக்கு மோசடி செய்த தங்க நகைகளை மேற்படி நிதி நிறுவனத்தில் அடகு வைக்க உதவியாக இருந்த அந்நிதிநிறுவன ஊழியர்களான ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த ரமேஷ் மகள் சந்தியா (24),தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ராமர் மகன் கிஷோர் ராகுல் (23), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த வெள்ளபாண்டி மகன் தங்ககுமார் (31), புதியம்பத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரும்படை தங்கம் மகன் பட்டு மாரியப்பன் (31), புதியம்பத்தூர் ஆர். சி தெருவை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் மகன் சுந்தர விநாயகம் (23), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மாரிச்செல்வம் (29) புதியம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜலெட்சுமி (27) மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த டெய்லரான பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் கடந்த 01.09.2023 அன்று கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment