தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை - நாளை 25ம் தேதி மாலை 6 மணி முதல் 27ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் - ஆட்சியர் அறிவிப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 September 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை - நாளை 25ம் தேதி மாலை 6 மணி முதல் 27ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் - ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்,
வெங்கடேஷ் பண்ணையாரின் 20-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்டத்தில் 25ம் தேதி மாலை 6 மணி முதல் 27ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் அருகே மூலகரை கிராமத்தில் 26.09.2023 அன்று அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனம் சார்பில் அமரர் என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 20-வது நினைவு நாள் கடைபிடிக்கப் படுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மேற்படி விழா அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 25.09.2023 மாலை 06.00 மணி முதல் 27.09.2023 காலை 06.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 

இத்தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது.


வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினமானது அமைதியான முறையில் அனுசரிக்க மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad