ஏரல் தாலுகாவில் டாக்டர். பூவை. எம். மூர்த்தியாரின் 69வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 April 2022

ஏரல் தாலுகாவில் டாக்டர். பூவை. எம். மூர்த்தியாரின் 69வது பிறந்தநாள் விழா.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர். பூவை. எம். மூர்த்தியாரின் 69வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவினையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது, 

விழாவில் மாவட்ட செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான சு.குட்டி பாண்டியன் தலைமை தங்கினார்.விழாவில் பேசும்போது நம் மக்களுக்கு பாடுபட்ட அண்ணல் அம்பேத்கார் போன்ற மற்றொரு தலைவர் மூர்த்தியார் என கூறினார்.மாநில தலைமை நிலைய பேச்சாளர் நா. கா. சரவணன் பேசுகையில் மூர்த்தியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுப்பட்டார். இது போல எங்கெல்லாம் உரிமைக்கான குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் மூர்த்தியாரின் வடிவங்களை காணலாம். அதன் வழி இன்றும் நம்முடன் மூர்த்தியார் வாழ்ந்து வருகிறார் என்றார்.

மாவட்ட துணை செயலாளர் ராயன். சி. சார்லஸ் வரவேற்புரை வழங்கினார். விழாவில்ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் அருணாச்சலம், ஒன்றிய தலைவர் அகஸ்டின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அரசூர். செந்தில் குமார்,ஒன்றிய தலைவர் கே. வி. கே. மகேஷ், பொருளாளர் ஆர். வி. ஆர். பெருமாள், மகிளிரணி தலைவர் பிரேமா, சாத்தான்குளம் கோமானேரி ஊராட்சி மன்ற தலைவர் கழுங்கடிமுத்து, ஒன்றிய தலைவர் சுதாகர், முத்துவேல், ஜெபராஜ், மாரி கிருஷ்ணன், ஆனந்த், சதிஷ், சின்னராசு, ஆகாஷ், அசோக், ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad