மாவட்ட எஸ்.பி.கலைத்திருவிழா போட்டியில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 January 2023

மாவட்ட எஸ்.பி.கலைத்திருவிழா போட்டியில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா இறுதிப் போட்டிகள் மதுரையில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கடந்த மாதம்  மூன்று நாட்கள்
(27,28,29)நடைபெற்றது.
இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், கணியன் கூத்து, கோலாட்டம், குழு நடனம் உட்பட 17 வகை நடன போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்தும் 600க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 3000 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
 இந்த போட்டிகளில் கலந்து கொண்ட தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் சஞ்சித் ஈஸ்வர் ஆங்கில செய்யுள் ஒப்புவித்தலில் மாநிலத்தில் முதலிடமும், அதே பள்ளி சார்பில்  மேற்கத்திய நடன குழுவினர் மாநில அளவில் 2ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.
இவர்கள் அனைவருக்கும் 09.01.2023 அன்று தூத்துக்குடி  எஸ்பி. முனைவர் பாலாஜி சரவணன் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரீடா, ஆசிரியர்கள் ஹேனா, பவானி, ஜெனிதா,  வசந்தி, மற்றும் வேல்மாரி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad