ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 December 2022

ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
டிசம்பர் 23 அன்று தூத்துக்குடி
ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
நடைபெற்றது. கூட்டத்தில் தலைமையாசிரியர் பிரீடா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைவர் சின்ன ஜெயந்தி,
துணைத் தலைவர் சித்ரா, 33வார்டு கவுன்சிலர் பொன்னப்பன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தலைவர் சின்ன ஜெயந்தி பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்து பேசுகையில் பள்ளி வளாகத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும், மேலாண்மைக் குழு உறுப்பினர் கிங்ஸ்லின் உதவியுடன் பெற்ற நிதியுதவியை கொண்டு பள்ளிக்குத் தேவையான ஸ்பீக்கர்கள் வாங்கவும்,பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில்  பள்ளி மாவட்ட அளவிலான போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் போட்டிகளில் வெற்றி பெற்று அதிகப்படியான மாணவர்கள் மாநில அளவிற்கு தகுதி பெற்றதைப் பாராட்டியும் அதற்கு உறுதுணையாக இருந்து மாணவ மாணவிகளை போட்டிகளுக்கு தயார் செய்த ஆசிரியர்களையும், ஒத்துழைப்பு தந்த பெற்றோர்களையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad